சாய்ந்தமருது கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றார், பாடசாலை நலன் விரும்பிகள் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.

இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், பிரதான கோரிக்கையாக திருமதி றிப்கா அன்சார் எனும் பெண் அதிபரை அதிபராய் தொடர்ந்தும் இருக்க வழி விடுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இங்கு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இப்போராட்டத்திற்கு தீர்வு இடைக்கவில்லை என்றால் முழு பாடசாலை சமூகத்தையும் ஒன்றிணைத்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என சூளுரைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெண்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


