நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

147 0

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விரைவாக கொடுப்பனவை வழங்க எழுத்துமூலம் அளித்த இணக்கப்பாட்டுக்கமைய நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை வழங்குமாறு தெரிவித்து, நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம்  கடந்த 4ஆம் திகதி முதல் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை தவிர, அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுகயீன விடுமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரியின் அரச பொதுப் பணித்துறை திணைக்கள பணிப்பாளர் எழுத்து மூலமான  இணக்கப்பாட்டை நேற்று (7) தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம், நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க போராட்டம் நேற்று 7ஆம் திகதியுடன் கைவிடப்பட்டுள்ளது என்றார்.