ஹெரோயின் வழக்கிலிருந்து 5 சந்தேக நபர்கள் விடுதலை

166 0

 திருகோணமலை கடற்பரப்பில் கடந்த 2019 ஏப்ரலில் 196.98 கிலோ ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 சந்தேக நபர்கள் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கடந்த புதன்கிழமை (5)‍ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, சந்தேக நபர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டு தீர்ப்பை வெளியிட்டது.

அத்தோடு இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்ட விதம் குறித்த கவலைகளை சுட்டிக்காட்டிய நீதியரசர் குழாம், விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பதும், பொலிஸார் வழங்கிய வாக்குமூலங்கள் முரண்படுவதும் தெளிவாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.