புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி மார்ச் மாதத்தில் 568.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணியை விட 78.5 சதவீதம் அதிகரிப்பினைக் காண்பிப்பதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி மார்ச் மாதத்தில் 568.3 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு மார்ச்சில் 318.4 மில்லன் டொலர்களாகவே காணப்பட்டது. அதற்கமைய கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 78.5 சதவீதமாக அதாவது 249.9 டொலர்களால் அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தினை விட மார்ச்சில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி 2023 பெப்ரவரியில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்பட்ட அந்நிய செலாவணி 407 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

