அழுது கொண்டிருந்த குழந்தைகளை ஆறுதல்படுத்துவதாகக் கூறி 8 பேரின் பஞ்சாயுதங்களை திருடிய பெண் கைது!

150 0

அழுது கொண்டிருந்த சிறுவர்களை ஆறுதல்படுத்துவதற்காக முன்பள்ளி ஒன்றுக்குச் சென்று சிறுவர்களின் தங்க  பஞ்சாயுதங்களை இரகசியமாக திருடிக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஆனமடுவ பொலிஸ் பிரிவின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய  ஆலங்குளம், ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கைதான பெண் ஆலங்குளம், வட்டேகெதர உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளுக்குச் சென்று அங்கு அழுதுகொண்டிருக்கும் குழந்தைகளை ஆறுதல்படுத்துவதற்காகச் செல்வதாகக் கூறி சில காலமாக இந்தப் பஞ்சாயுதங்களைத் திருடி வந்துள்ளது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் எட்டு சிறுவர்களின் கழுத்தில் இருந்த தங்க பஞ்சாயுதங்களை யாருக்கும் தெரியாமல் பலமுறை திருடிச் சென்றுள்ளதாகவும், மற்ற பஞ்சாயுதங்களும் இதேபோல் திருடப்பட்டுள்ளதா என விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும்   பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.