பேசாலையில் உள்ள புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நேற்று (6) மாலை கூட்டுத் திருப்பலியும் புனித வியாழன் திருச்சடங்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஒருங்கமைப்பில், அமல மரி தியாகி சபையைச் சார்ந்தவரும் மறை போதகருமான அருட்பணி ப.ஜெறோம் லெம்பேட் அடிகளாரின் பங்கேற்பில், பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ். டிக்சன் அடிகளாரின் தலைமையில் இந்த கூட்டுத்திருப்பலியும் புனித வியாழன் திருச்சடங்கும் நடைபெற்றது.
கத்தோலிக்கர்களால் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படும் இவ்வாரத்தின் ‘புனித வியாழன்’ தினமானது கத்தோலிக்க மக்களுக்கு பல மறைபொருள்களை உணர்த்துகிறது.
இயேசுவின் இறுதி இரவுணவும், நற்கருணையின் உருவாக்கமும், பணிவாழ்வும் உருவாக்கப்பட்ட தினமாக இப்புனித வியாழன் வழிபடப்படுகிறது.

