மத்திய மாகாணத்தில் பத்து வருடங்களுக்கு மேல் நகர்ப்புற பாடசாலைகளில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிறி பியதாச தெரிவித்துள்ளார்.
அபியச எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘மத்திய மாகாணத்தில் நகர்ப்புற பாடசாலைகளில் பலர் 10 வருடத்திற்கும் மேலாக கடையாற்றுகின்றனர். இன்னும் சிலர் மேலதிகமாக உள்ளனர். ஆகவே இடமாற்ற சபைகள் ஊடாக அவர்களை அப்பாடசாலையிலிருந்து ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற பாசாலைகளுக்கு மாற்றவுள்ளோம்;.
அதி கஸ்ட பாடசாலைகளில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நகர் பாடசாலைகளில் சேவையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்;கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இனங்கண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பண்மிக்க கல்வியினையும் பெற்றுக்கொள்வதற்கு ‘சில்பாலோக்க எட்லஸ்’ போன்ற கல்வித்திட்டங்ள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் ஹட்டன் கல்வி வலயம் ஆகியன இணைந்து ‘அபியச’ எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவையை முன்னெடுத்தன.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.சிறீதரன் தலைமையில் ஹட்டன் சிறிபாத சிங்கள மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதன்போது இடமாற்றம், அபிவிருத்தி, திட்டமிடல், ஒழுக்காற்று நடவடிக்கைகள், சேவை நிரந்தரமாக்கல், விடுமுறை, ஆசிரியர் விடுவிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 16 விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
குறித்த நடமாடும் சேவையில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹட்டன் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

