திருமலையில் மோதல் : நிலைமயைக் கட்டுப்படுத்த இராணும், பொலிஸ், அதிரடிப்படை களத்தில்!

220 0

திருகோணமலை விஜிதபுர பகுதியில் இரு மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.