உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக அரச அலுவலர்கள் 3000 பேர் நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையால், அவர்களின் சம்பளமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால் குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதனால் தேர்தலில் போட்டியிடவுள்ள அரச அலுவலர்களுக்காக கடந்த மார்ச் 9 ஆம் திகதி முதல் இம்மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய குறித்த அந்தந்த அலுவலர்களின் அடிப்படைச் சம்பளத்தைச் செலுத்துவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

