உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி

51 0

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சட்டத்தை வகுப்பதற்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஆலோசனைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய சட்ட வரைபொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.