ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அறிவுறுத்தலை வெளியிட்டார் ஜனாதிபதி

92 0

இலங்கையின் பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை  அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

ஜனகரத்நாயக்கவை  பதவியிலிருந்து நீக்குவதற்கான ஏழு நாள் அறிவுறுத்தலை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

2022 ம் ஆண்டின் பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்தின் படி  ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐந்து காரணங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனக ரத்நாயக்க  ஆணைக்குழுவின் விதிமுறைகளிற்கு மாறாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் என்பது ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தின் அடிப்படையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளி  ஜனக ரட்நாயக்க என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் வகையில் சட்டத்தின் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இலங்கை மின்சார சபையின் கட்டண அதிகரிப்பினை ஆணைக்குழுவின் தலைவர் எதிர்த்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக உறுப்பினராக பதவிவகிக்கும் நிலையில் இந்த துறையுடன் தொடர்புபட்ட அமைச்சரவை இலக்குவைத்து  அறிக்கைகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.