களுத்துறையில் தேர்தலை நடத்த இடைக்காலத் தடையுத்தரவு

165 0

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை மே 12 ஆம் திகதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.