தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம் மாலை நேரம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்து அங்கு நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.இவ் நிகழ்வில் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் முகமாக மக்கள் பதாதைகள் தாங்கியவண்ணம் கலந்துகொண்டனர்.ஈருருளிப்பயணத்தை பிரான்ஸ் உள்ளூர் ஊடகங்கள் தமது செய்திகளில் பிரசுரிப்பது குறிப்பிடத்தக்கது.






