பாணின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

73 0

450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகவும் வகையில் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் ப்ரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க குறித்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.