‘சமயங்’ கொலை சம்பவம் தொடர்பில் அறிவியல் சார்ந்த விசாரணைகள்

343 0
சமயங் உள்ளிட்ட ஏழு பேரின் கொலை சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற வேன் வாகனத்தில் இருந்து தலைமுடி மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இடத்தில் இருந்த தாவரங்களின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , அதனூடாக அறிவியல் சார்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வந்த வேன் ஹொரணை – மொரகஹஹேன பகுதியில் கைவிடப்பட்டு சென்றிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.