பெண்களுக்கெதிரான வன்முறையை களையும் வகையில் யாழில் விழிப்புணர்வு பேரணி

334 0
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி  ஆரம்பமானது.
குறித்த பேரணியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றி ஆரம்பித்து வைத்தார்.
குறித்த பேரணி யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக ஏ9 வீதியை வந்தடைந்து, யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காணி முர ளிதரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் எனப்பல ரும் கலந்துகொண்டனர்.