மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 50 ரூபா குறைப்பு

164 0

மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி   மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை லீற்றர் 305 ரூபாவாகும்.

இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் அதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.