மூதூரில் கருப்பு தினம் அனுஷ்டிப்பு

143 0

மார்ச் 01ஐ கருப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு, தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மூதூரிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டது.

அந்த வகையில், திருகோணமலை –  மூதூர் நகரிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சேவை பெற வருகைதந்தோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் எக்ஸ்ரே பிரிவினர் பணிப் பகிஷ்கரியில் ஈடுபட்டனர்.

இதனால் வைத்திய சேவை பெற வருகைதந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபட்டாலும் கையில் கருத்தப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

மூதூர் தள வைத்தியசாலையின் அவசர பிரிவு மாத்திரமே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.