களுத்துறை தூப்பாக்கி பிரயோக சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையில் சோதனை

344 0

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹொரனை – மொரகாஹஹேன பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்போது காவற்துறை அதிரடிப் படை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சந்தேக நபர்கள் குறித்த தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச் சென்ற வெள்ளை வேனை கைவிட்டு இடத்திற்கு அருகில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் சிறை அதிகாரிகள் இருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.