இந்தியாவில் உயிரிழந்த கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று காலை விமானத்தின் மூலம் அவரின் உடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவிற்கு தப்பிச் சென்றிந்த இவர், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அது பலனிளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரின் உடலம் ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது சகோதரரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

