கிளிநொச்சியில் சிறு தானியப் பயிற்செய்கையில் விவசாயிகள் நாட்டமில்லை

405 0
சிறுதானிய பயிர்ச் செய்கையில் ஏற்படும் அதிக செலவீனத்தினால் தற்போது அதிக விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச விவசாயக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
கண்டாவளைப் பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலாளர் முகுந்தன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே விவசாயிகளினால் இக் கருத்து முன்வைக்கப்பட்டது.
இங்கு இவ் விடயம் தொடர்பில் கருத்துரைத்த விவசாயிகள் ,
பிரமந்தனாறுப் பகுதியில் ஏற்று நீர்ப்பாசன வசதிகொண்ட சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முன்னைய காலங்களில் சிறுதானிய பயிர்களே செய்கை பண்ணப்பட்டது. அதனை தற்போதும் தொடர அதிக பொருட்செலவு நீண்ட அலைச்சல் , போதிய வருமானம் இன்மை உள்ளிட்ட பல சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணத்தினால் தற்போது அப்பிரதேசத்தினில் தென்னை பயிர்ச் செய்கை அதிகரித்துள்ளது. இதே நிலைமை  நீடிக்குமானால் இக் கிராமத்தில் இன்னும் மூன்று ஆண்டுகளில் சிறுதானிய செய்கைக்கே நிலமற்ற தன்மையே கானப்படும் . ஏனெனில் இன்றுவரையான நிலையின் படி200 ஏக்கரை அண்மித்த நிலப்பரப்பில் தென்னை பயிரப்பட்டு வேலிகள் அமைக்கப்படுகின்றன. எனவும் விவசாயிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இக் கருத்து தொடர்பில் பதிலளித்த ஏனைய விவசாயிகள் இன்றைய நிலையில் சிறுதானியச் செய்கைக்கு அதிக செலவும் நீண்ட பராமரிப்பும் ஏற்படுகின்றபோதிலும் போதிய வருமானம் இல்லாத நிலமையே காணப்படுகின்றது. ஆனால் தென்னைச் செய்கையில் 5 ஆண்டுகள் காத்திருக்க அதன்பின் போதிய வருமாணம் கிட்டுகின்றது. எனவே நாம் விரும்பியே பயிரிடுகின்றோம். எனத் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளித்த பிரதேச செயலாளர் . குறித்த விடயத்தினை அடுத்த மாவட்ட விவசாய ஒருங கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.எனத் தெரிவித்தார்.