ஐ.நா.சபையின் புதிய பொதுசெயலாளர் இலங்கை விஜயம்

258 0
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த தினம் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார்.
இதன்போது அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுசெயலாளர் குட்டேரெஸ், விரைவில் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.