தி.மு.க.வில் இணைந்தார் பிரபல நடிகர்!

263 0
பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான ராதாரவி திமுகவில் இணைந்தார்.
2002 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை சைதாப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாரவி, சில ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் மீண்டும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார்
சமீபத்தில் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்ததை அடுத்து ராதாரவி திமுகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னில்லையில் அவர் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தமிழ்நாட்டை காப்பாற்ற மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்