மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் சமீர சேனாரட்ன, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்காலிக அடிப்படையில் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து சமீர சேனாரட்ன நீக்கப்படுவதாக மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோவின் கையொப்பத்துடன்; அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக பொய்யாக நாடகமாடி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் எவருக்கும் தொடர்பு கிடையாது என தனியார் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

