காணிகளை விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்….(காணொளி)

245 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்ப மக்களின் வாழ்வாதார காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணி ஆகியன விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு மார்ச் மாதம் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் முடிவுகாணப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

 

புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்….

 

இதேவேளை இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி, இராணுவ தளபதிக்கு தெரிவித்திருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.