பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு!

372 0

பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இரா சம்பந்தன்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானம் சிறியளவிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் கால அவகாசம் கோரினால், கடுமையான நிபந்தனைகளுடனேயே வழங்கப்படவேண்டும்.

அத்துடன் ஜெனீவாத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, மீள நிகழாமை, இழப்பீடு, பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் மூவருடன், பிரான்ஸ் தூதுவரும் கலந்துகொண்டார்.