சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

233 0

சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை சாலிகிராமத்தில் அம்பேத்கார் சாலையை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தில்லைஅரசி. மேடை பாடகி. இவர்கள் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை, 80 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.கொளத்தூர் பாலகுமரன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.

பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி. டிவி. கேஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.