ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் புதிய திட்டம்

222 0

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க வெள்ளை மாளிகைக்கு, அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் புதிய திட்டத்தை அனுப்பியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளை முழுவதுமாக ஒழிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான திட்டவறிக்கையை அமெரிக்க பாதுகாப்பு  மையமான பென்டகான் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க பென்டகன் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில்  பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை செய்து  வருகின்றனர். இத்தகைய தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, புதுமையான  திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன், தீவிரவாத ஒழிப்பு  நடவடிக்கையில் புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் ஐஎஸ்  தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலரை ஒதுக்கி டிரம்ப்  உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.