பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

17 0

பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை நடைபெறும் புதிய பாராளுமன்ற அமர்விற்கு பாராமன்ற உறுப்பினர்கள் வரும் வழியை மறுத்து அவர் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் தலையிட்டு கஸ்ஸப தேரரையும் கமந்த துஷார என்பவரையும் கைது செய்தனர்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (08) பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கரத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.​