வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

258 0

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நியுயோர்க் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது.

வடகொரியா மேற்கொண்ட பல்வேறு ஆயுதச் சோதனைகளால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை புதுப்பிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

இந்த நிலையில் மலேசியாவில் வைத்து வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர் கிம் ஜொங் நாம் கொலை செய்யப்பட்டார்.

வடகொரியாவே இந்த கொலையை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பேச்சுவார்த்தையும் ரத்தாகி இருக்கிறது.