யாழ் இந்து மகளீர் கல்லூரி வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

262 0
யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாடசாலை நேரங்களில் கனரக வாகம் பயணிக்க முடியாது என மாநகர சபையினரின் அறிவித்தல் பலகை வீதியுன் நான்கு இடங்களுல் நாட்டப்பட்டுள்ளபோதிலும் அதனை பொலிசார் நடைமுறைப்படுத்துவது கிடையாது எனப் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கையில் ,
பலாலி வீதிக்கும் காங்கேசன்துறை வீதியினையும் இணைக்கும் யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியின் ஊடாக மகளிர் கல்லூரி ,மகளிர் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுடன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலை நாட்களில் பயணிப்பதை ஆராய்ந்த மாநகரசபைநினர் குறித்த வீதியின் ஊடாக காலை 6.30 முதல் 8 மணி வரையிலும் மதியம் 1.30 முதல் 2.30 மணிவரையிலும் கனரக வாகனங்கள் இப் பாதையூடாக பயணிப்பதற்கு தடைவிதித்து அறிவித்தல் பலகையினையும் 4 இடங்களில் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவித்தல் பலகை நாட்டப்பட்ட வீதியில் தினமுக் காலையும் மாலையும் வீதி ஒழுங்கிற்காக 4 இடங்களில் போக்குவரத்துப் பொலிசார் கடமையில் ஈடுபடுகின்றனர் . ஆனால் இத் தடை செய்யப்பட்ட பாதையின் ஊடாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தவிர்ந்த பார ஊர்திகள் , டிப்பர்களும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஊடாக வீதியை தடை செய்த வண்ணம் மிகவும் நெருக்கடியாக பயணிக்கின்றனர். ஆனால் அவ் வீதியில் கடமைக்கு நீக்கும் போக்குவரத்துப் பொலிசாரோ வேடிக்கை பார்க்கின்றனர். என பெற்றோர் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் குறித்த வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களிற்கு வழிவிடும் வகையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டப்பட்டுள்ள அறிவித்தலை நடைமுறைப்படுத்த பொலிஸ்  அதிகாரிகள் கவனம் செலுத்தி மாணவர்களின் பயணத்திற்கு உதவ முன்வர வேண்டும் . எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.