ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இன்று ஆரம்பம்

384 0
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் நடைபெறும்.
மாநாட்டில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீர நாளையதினம் மாநாட்டில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
அதேநேரம் 2015ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மேலும் 2 வருடகால அவகாசம் வழங்குமாறு அவர் கோரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பிலான பிரேரணையை இந்த முறை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.