பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஈரான் நீதிமன்றம் விதித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார்.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடக் கூடாது என்று கூறப்படும் நிலையில், அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவருக்கும் ஈரான் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

