தீவுப்பகுதி மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தீவகத்தில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல் செயற்றிட்டமும் வேலணையில் இன்று (பெ. 1) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
தீவுப்பகுதி மக்கள் பல துன்ப துயரங்களை சந்தித்துள்ளார்கள். பல அபிவிருத்தியை செய்யவேண்டிய பிரதேசமாக தீவகம் காணப்படுகிறது.
நாம் இந்த தேர்தல் மூலம் வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம் என்றார் .
அத்துடன் தீவக மக்கள் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி சார் பிரச்சினைகளில் பிரதேச சபைகளால் தீர்க்கவேண்டியதை செய்து முடிக்கும் வல்லமை கொண்ட ஆட்சியை பிரதேச சபைகளில் அமைப்போம் என வேட்பாளர்கள் உறுதிபூண்டனர்.
வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.

