யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேருடைய பெயர்கள் செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவுக்கான தேர்தல் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்தலில் அப்பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் மிகுந்தன், பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரவிராஜ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதற்கமைய முதல் மூன்று அதி கூடிய வாக்குகளைப் பெற்றவர்களின் பெயர்கள் பல்கலையின் செனட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. செனட் சபையின் ஊடாக, மூவரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவர்களில் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பல்கலையின் உப வேந்தராக நியமனம் செய்யவுள்ளார்.
இந்த 5 பேராசிரியர்களில் சிறிசற்குணராஜா மொத்தமாக 18 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

