ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவி

205 0

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவியாகவும் கருதப்படும் பெண் ஒருவர்  நேற்று (ஜன 29)  மோதரை  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடமிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  14 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர்.

இந்த சந்தேக நபரான  பெண், பிரான்ஸுக்கு தப்பிச் சென்று  தலைமறைவாகியுள்ள ரூபன்  என்ற பிரதான போதைப்பொருள் கடத்தல்காரனுடன் நேரடி தொடர்பில் உள்ளவர் என்றும்  போதைப்பொருள் கடத்தும் நபர் எனவும்  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான பெண் எனவும், கடுவெல பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது நான்கு கூரிய   கத்திகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி  கூறியுள்ளார்.