கொடிகாமத்தில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

262 0

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த தங்கவேலு மோகனச்சந்திரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேட்டைக்காக நேற்று (26) வியாழக்கிழமை கட்டுத் துவக்குடன் சென்ற வேளை அது தவறுதலாக வெடித்ததில், படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.