கிளிநொச்சி, கல்மடுக் குளத்தின் நீர், தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. குளத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதன் காரணத்தால், இவ்வாறு குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் ரூபாய் 500 மில்லியன் வரையான நிதியில், இக்குளத்தின் அணைக்கட்டு வேலைகள் நடைபெறவுள்ளன. 2009ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலத்தில், இக்குளத்தின் அணைக்கட்டு உடைக்கப்பட்டது.
உடைக்கப்பட்ட அணைக்கட்டு மட்டும் புனரமைக்கப்பட்டது. குளத்தின் முழுமையான அணைக்கட்டு வேலைகள் நடைபெறாத நிலையில், தற்போது வேலைகள் நடைபெறுவதற்காக குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குளத்தின் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் வரும் சிறுபோக நெற்செய்கை இடம் பெறாது.

