கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

274 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதுடன் சுமார் மூவாயிரம் ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாந்தை கிழக்;கு வவுனிக்குளத்தில் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்துள்ளது.

இதனால் இக்;குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் வரையான நெற்செய்கைகளில் தற்போது அரைவாசிக்கும் மேல் அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் கீழ் பயிர் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளை பாதுகாக்கும் பொருட்டு கழிவு வாயக்;கால்கள், கிணறுகள் என்பவற்றில் இருந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீர் இறைத்து தமது பயிர் செய்கைகளை பாதுகாத்து வருகின்றனர்.

இவ்வாறு விவசாயம் அழிவடையுமாயின் தாம் பாரிய நட்டத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மானாவாரி நெற்செய்கைகள் மற்றும் சிறுதானிய செய்கைகள் என்பன முழுயையாக அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.