கொழும்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் : வாக்குமூலம் பதிவு!

217 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லனவை அறையில் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை  ஊழியர்கள் குழுவினர் அவரை அலுவலகத்தில் 5 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அந்த அதிகாரி  மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ருக்க்ஷான் பெல்லனவை  அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.