விமலின் பிளவு: புதிய கூட்டணியை அமைக்க பேச்சு நடத்தும் மஹிந்த அணி

215 0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை மேலும் பலப்படுத்தி, எதிர்காலத்தில் புதிய பலம்பொருந்திய கூட்டணியாக அரசியலில் களத்தில் போராட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கூட்டணி தமது நோக்கத்துக்கு எதிராக செயற்படுமாயின், புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குதில் பிரச்சினை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (விவாதங்களின்போது) தமக்கு போதுமான காலம் கிடைப்பதில்லை என அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, சுயாதீனமாக செயற்பட பேச்சுவார்த்தையின் மூலம் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.