தேர்தலை தடுப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

185 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களை கூறி அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்துகிறது.

தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்க மறுத்தால் அது 3 ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றமாகும் என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.