யாழில் குளத்திலிருந்து சடலம் மீட்பு

180 0

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில், ஊர் மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

அதே பகுதியை சேர்ந்த செல்வத்துரை மகேஸ்வரி (வயது 56) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.