இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்

216 0

இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று  (ஜன 19)  அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இந்த பதவிப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.