இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் ஏனைய பூர்வக்குடிகளின் தலைவர்களுடன் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று அழைப்பு விருத்திருந்தார்.
அதற்கமைய தாம் 75வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளதாக பூர்வக்குடிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலெத்தோ தெரிவித்துள்ளார். ஊறுவரிகே வன்னியலெத்தே நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.
சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ளும் பூர்வக்குடிகளின் தலைவர்களுக்கு சகல வசதிகளும் செய்துக்கொடுக்கப்படும் என பிரதமர் இதன் போது அறிவித்துள்ளார்.

