நுவரெலியா பிரதான நகரில் ஹட்டன் நெஷனல் வங்கி முன்பாக குயின் எலிசபெத் பிரதான வீதியில் நிறுத்திவைத்த பெஜீரோ வாகனம் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் நேற்று (17) செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள டயர் கடையொன்றின் உரிமையாளர் தனது பெஜீரோவை நிறுத்திவிட்டு கடையொன்றுக்கு சென்றுள்ளார்.
மீண்டும் வீட்டுக்குப் புறப்படுவதற்காக பெஜீரோ நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது அங்கே வாகனம் இருக்கவில்லை எனவும் பெஜீரோவின் திறப்பு மாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும் வாகன உரிமையாளர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் வாகன காப்பறுதி, வாகன அனுமதிப் பத்திரம் என்பன வாகனத்தினுள் உள்ள நிலையிலேயே பெஜீரோ திருட்டுப்போயுள்ளதாகவும் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சிசிடிவி கெமரா பதிவின் துணையோடு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

