தமிழரசுக் கட்சி பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது

156 0

திர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் இன்று (ஜன. 18) மதியம்  கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக கிளிநொச்சி – கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து இன்றைய தினம் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.