சிறுநீரக கடத்தல் – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

201 0

பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கும்பல் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் பணம் தருவதாக கூறி ஏமாற்றி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு சந்தேக நபர்களில் இருவர் தரகர்கள் என்பதுடன் மற்ற இருவரும் அவர்களுக்கு உதவிய இரண்டு கிராம சேவகர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தரகர்களில் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்டதோடு ஏனைய மூவரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.