அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் – ரஸ்ய கொடிக்கு தடை

183 0

அவுஸ்திரேலியாவிற்கானஉக்ரைன் தூதுவரின் விமர்சனத்தை தொடர்ந்து அவுஸ்திரேலிய ஓபனில் ரஸ்ய கொடியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய ஓபனின் முதலாம் நாள் அன்று ரஸ்ய கொடியை ரசிகர்கள் காண்பித்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்கான உக்ரைன் தூதுவர் கடும் கரிசனை வெளியிட்டார் .இதனை தொடர்ந்து ரஸ்ய கொடியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

உலகின் ஏனைய விளையாட்டுக்களை போல ரஸ்ய பெலாரஸ் வீரர்கள் இம்முறை அவுஸ்திரேலிய ஓபனில் நடுநிலைiயான பெயரின் கீழ் போட்டியிடுகின்றனர்.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் காரணமாகவே இந்த நிலை காணப்படுகின்றது.

எனினும் குழப்பம் ஏற்படாத வகையில் இரு நாடுகளின் ஆதரவாளர்களும் கொடிகளை காண்பிக்கலாம் என  டெனிஸ் அவுஸ்திரேலியா முதலில் தெரிவித்திருந்தது.

இதேவேளை முதல் சுற்றில் ரஸ்ய உக்ரைன் வீராங்கனைகளிற்கு இடையிலான போட்டியின் போது ரஸ்ய கொடி காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா நியுசிலாந்திற்கான உக்ரைன் தூதுவர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய ஓபன் முடிவடையும் வரை ரஸ்ய பெலாரஸ் கொடிகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெனிஸ் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

போட்டிகளிற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ரசிகர்கள் கொடிகளை கொண்டுவரலாம் என்பதே எங்களின்  கொள்கையாக காணப்பட்டது எனினும் நேற்று இடம்பெற்ற சம்பவம் காரணமாக புதிய நடைமுறையை அறிவிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.