சிறுநீரக கடத்தல் : இரு கிராம சேவகர்கள் உட்பட மூவர் கைது!

160 0

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மூவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்து சிறுநீரக  கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பிரதான போதைப்பொருள்  வர்த்தகர் மற்றும் இரண்டு கிராம உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்தில் கைதான  இரண்டு கிராம உத்தியோகத்தர்களும்  கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளைச்  சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.